fbpx
Homeபிற செய்திகள்562 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

562 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10.95 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கினை விவசாயின் பயன்பாட்டிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு 6 பள்ளிகளை சார்ந்த 562 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.27 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், குன்னூர் துணைத்தலைவர் வசிம் ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, திட்ட குழு உறுப்பினர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img