Homeபிற செய்திகள்பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த ராஜேஷ்குமார் எம்.பி.

பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த ராஜேஷ்குமார் எம்.பி.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நிதியின்கீழ், ரூ.13.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப் பினர் கே.ஆர்.என் இராஜேஷ் குமார் எம்பி., மாவட்ட ஆட்சியர் ச. உமா ஆகியோர் புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே.சாந்தா அருள்மொழி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img