Homeபிற செய்திகள்சென்னிமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஜவுளி பூங்கா

சென்னிமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மினி ஜவுளி பூங்கா

தமிழக அரசு சார்பில் சென்னிமலையில் மூன்று கோடி ரூபாய் செலவில் மினி கைத்தறி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1.5 ஏக்கர் இடம் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்தாவது தேசிய கைத்தறி தின விழாவை ஒட்டி 2 நாள் கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா துவக்கி வைத்தார்.

அதன் பிறகு கைத்தறி உதவிய இயக்குனர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது: இவ் விழாவில் 45 நெசவாளர்களுக்கு ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பத்து நெசவாளர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டது. 17 நெசவாளர்கள் சென்னை யில் நடைபெறும் விழா வில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பரிசுகளை பெறுகின்றனர். இவர்கள் பல்வேறு கைத்தறி சங்கங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் உருவாக்கிய வடி வமைப்புகள் காரணமாக பரிசுகள் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 190 கைத்தறி சங்கங்கள் உள்ளன. அதில் மூன்றை தவிர மீதி உள்ளவை நன்றாக செயல்படுகின்றன. தற்போது ரூ250 கோடி மதிப்புள்ளான கைத்தறி துணிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 150 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கான யூனிஃ பார்ம்கள் தயாரிக்கப்பட்ட அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான குறியீடு முடிக்கப் பட்டுள்ளது. இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் 65 லட்சம் வேட்டிகள் 65 லட்சம் சேலைகளா 52 கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

அரசிடமிருந்து நூல் தருவது சம்பந்தமாக ஆணைகள் வந்ததும் உற்பத்தி துவங்கும். இந்தாண்டு ஈரோடு மாவட் டத்தில் 40 பேர் கைத்தறி நெசவு பயிற்சி பெற்றனர்.

இம்மாவட்டத்தில் ஒரு மெகா கிளஸ்டர் உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தறி மேம்பாட்டுக்கு ரூபாய் 50000 வரை முத்ரா கடன் உதவி வழங்கப்படுகிறது. இன்றைய விழாவை ஒட்டி வேளாளர் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் கைத்தறி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகிரியில் மருத்துவ முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img