Homeபிற செய்திகள்அரசு விதைப் பண்ணைகளில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு

அரசு விதைப் பண்ணைகளில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி வட்டார த்தில் அம்மைந்துள்ள வண்டுராயன்பட்டு மற்றும் மிராளூர் அரசு விதைப் பண்ணைகளை வேளாண்மை இணை இயக்குனர் (பொ) கென்னடி ஜெபக்குமார் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (நு.பா) செல்வம் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.

அரசு விதைப் பண்ணை வண்டுவராயன்பட்டில் 2024- 25ம் ஆண்டு பயிர்த்திட்டத்தின்படி முதல் பருவத்தில் தக்கைப்பூண்டு விதை உற்பத்திக்காக 10 ஏக்கர் பூக்கும் மற்றும் காய் உருவாகும் பருவத்தில் உள்ள பயிரினை ஆய்வு செய்தார்கள்.
ரசாயன உரத்தால் புண்ணான மண், தக்கைப் பூண்டு வளர்ப்பதால் பொன்னாகும். தக்கைப்பூண்டு நிலத்திற்கு வேண்டிய சத்துக்களை எளிதில் கிடைக்க செய்கிறது. இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. மண் வளத்தினை காத்து அடுத்த பருவத்தில் வளரக்கூடிய பயிரினை செழிக்க வைக்கும் மீதமுள்ள 36.64 ஏக்கருக்கு தக்கைப்பூண்டு மக்கி உழுவதற்கும் விதைத்து ஒரு மாதம் கழித்து தண்ணீர் வைத்து அதே நிலத்தில் மடக்கி உழுவதிட வேண்டும்.

இவ்வாறு மடக்கி உழுவதால் மண்ணின் உள்ள தழைச் சத்து அதிகமாகிறது. மேலும் கார்பன் மற்றும் நைட்ரஜன் வகிதாச்சாரம் அதிகமாகும். அதனால் மண்ணிலுள்ள சத்துக்களை அடுத்த சாகுபடி செய்யும் பயிருக்கு எளிதில் கிடைக்குமாறு எடுத்து கொடுக்கும். இதனால் அடுத்து சாகுபடி செய்யும் பயிரின் மகசூல் அதிகமாகும்.

இவ்வாறு தக்கைப் பூண்டு சாகுபடி செய்வதால் மண்வளம் காத்து நல்ல மகசூல் எடுக்கலாம் ஆய்வின்போது விதை சுத்துதரிப்பு நிலையத்தில் உள்ள சான்றட்டை பொருத்தப்பட்ட 30 மெ.ட நெல் விதைக் குவியல்களை உரிய வேளாண்மை விரிவாக்கம் மையங்களுக்கு மாற்றம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது.

ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் (ப.நி) உண்ணாமலை உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img