fbpx
Homeபிற செய்திகள்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள்

முன்னாள் முதல் வரும், திமுக முன்னாள் தலை வருமான கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் அனுசரித்தனர்.

அந்த வகையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் வடக்கு நகர செயலாளர் முகமது யூனுஸ் தெற்கு நகர செயலாளர் முனுசாமி ஆகியோர் தலைமையில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பா.அருண்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பேருந்து நிலையம் அருகே அலங்கரிக் கப்பட்ட அவரது திருவுருவப்படத் திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவை போற்றும் விதமாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜம்ரூத் பேகம், யாசீன், உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img