மேட்டுப்பாளையம் ஆக்ஸிஸ் வங்கி எதிரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிய ஷோருமை துவங்கி உள்ளது. இதனை கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை செயலாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகரமன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் மற்றும் மேட்டுப்பாளையம் சூப்பர் ஆட்டோ எஸ்பேர்ஸ் ஜோதிமணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். மேட்டுப்பாளையம் முத்து பைனான்ஸ் விதி சிட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கந்தசாமி விற்பனையை துவக்கி வைத்தார்.
எஸ்கேஎஸ்டி சிட்பண்ட்ஸ் பிரை வேட் லிமிடெட் பொறுப்பாளர் நாகராஜ் முதல் விற்ப னையை பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார்.
இதில் ராம்ராஜ் காட்டன் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேட்டிக்கு என்று தனி முத்திரை பதிந்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் ஆகும் என நிகழ்வில் தெரிவித்தனர்.