கோவை நல்ல ஆயன் குருகுலக் கல்லூரியில் 14 ஆண்டுகள் பயின்று பாதிரியார்களாக தேர்வாகியுள்ள சகோதரர்கள் திவ்யோதயா டைரக்டர் பாதர் வில்சன் தலைமையில் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளி வாசலுக்கு சென்றனர். அவர்கள், தொழுகை வழிபாட்டைப் பார்வையிட்டனர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் உமர்ஃபாருக் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து பாதிரியார்களாக தேர்வாகியுள்ள சகோதரர்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி குறித்தும் அதன் பணிகள் குறித்தும் அறிமுகப்படுத்தினர். 80 ஆண்டு கால ஜமாஅத்தே இஸ்லாமியின் செயல்பாடுகள் மக் கள் சேவைகள் மத நல்லிணக்கப் பணிகள் போன்றவைகளை விளக்கினர்.
இந்நிகழ்வில் மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் அனை வரையும் வரவேற்றார்.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளி இமாம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி மஸ்ஜிதுல் ஹுதா இமாம் மௌலவி ரியாஸ்தீன் அஸ்ஹரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் இஸ்லாமிய கொள்கைகள் கோட்பாடுகளை மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி எளிய முறையில் விளக்கினார்.
நிகழ்வின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் குர்ஆன் அன்ப ளிப்பாக வழங்கப்பட்டன.