பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் 85 வது பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் ஷாஜகான் தலைமை யில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில துணை செயலாளர் கிருஷ்ணசாமி, நகர தலைவர் அருண், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜெயராம்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அக்னி தேவன் வர வேற்புரை ஆற்றினார்.
மாநில அமைப்பு துணை செயலாளர் தங்கராஜ், மாநில துணை தலைவர் மின்னல் சிராஜ் ஆகியோர் ஏழை மக்களுக்கு மதிய உணவுகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிவநேசன், சதாசிவம், சீனிவாசன், பிரசாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.