fbpx
Homeபிற செய்திகள்கராத்தே போட்டியில் வெற்றியை குவித்த கோவை மாணவர்கள்

கராத்தே போட்டியில் வெற்றியை குவித்த கோவை மாணவர்கள்

கோவையில் ஹயாஷி – ஹா கராத்தே சர்வதேசக் கழகத்தின் சார்பாக 5வது சர்வதேச கராத்தே போட்டி நடந்தது. இதில் இந்தியா, ஈரான், ஓமன், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகள் பங்கு பெற்றன.

இந்தியா சார்பில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டன. கத்தா குமித்தே பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் இடையர்பாளையம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் சார்பாக பயிற்சியாளர்கள் விஜய் பிரதாப் மற்றும் மீனாம்பிகை மேற்பார்வையில் மாணவர்கள் பல் வேறு வயது அடிப்படையில் கலந்து கொண்டனர்.

குமித்தே பிரிவில் முதல் பரிசு எஸ்.பிரஜித்துக்கும் இரண்டாம் பரிசு ஏ.ஜஸ்நாத்துக்கும் கத்தா பிரிவில் மூன்றாம் பரிசு பி.அஸ்வினுக்கும் மற்றொரு குமித்தே பிரிவில் பி.ஸ்ரீராமுக்கும் கத்தா பிரிவில் மூன்றாவது பரிசு எம்.ஸ்ரீ சித்திஷ்க்கும் இன்னொரு கத்தா பிரிவில் மூன்றாவது பரிசு வி.ஸ்வஸ் திக்கிற்கும் கிடைத்தன.

வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியை கே.வி.பானுமதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img