மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித் துறை ஊராட்சியில் நெல் லித்துறை, நந்தவனப் புதூர், பூதப்பள்ளம், விளா மரத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் நெல்லித்துறை நீருந்து நிலையத்தில் இருந்து 14 வது நிதிக்குழு மானியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இதனை மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காரமடை ஊராட்சி ஒன்றிய குழு சேர்மன் மணிமேகலை மகேந்திரன், நெல்லித்துறை ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சித்ரா காளிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் பிரவீன் குமார், வேல்முருகன், சாவித்திரி, ராதா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.