fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரி சாலை பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிர்மலா கல்லூரி சாலை பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பா ளர்கள் கோவை மாநகரப் பிரிவு நிர்வகிக்கும் நிர்மலா மகளிர் கல்லூரியின் சாலை பாதுகாப்புப்படை சார்பில் நேற்று (3ம் தேதி) மதியம் 2 மணியளவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி யின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், முதல்வர் முனை வர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை பாதுகாப்புப் படை அதிகாரியும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் ப.மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாள ராக பங்கேற்ற ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுவாதி பேசுகையில், சாலையில் கவனமாக வண்டி ஓட்ட வேண்டும், முறைப்படி லைசன்சு வாங்க வேண்டும் என்பன போன்ற கருத் துகளை எடுத்துரைத்தார்.

போக்குவரத்து தலைமைக்காவலர் இராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து முதன்மை வார்டன் (கோவை மாநகர்) இன்ஜினியர் சாம் பாபு, சாலை விதி முறைகள், சிக்னல் மற்றும் விழிப் புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கைச் சிந்த னைகளை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு போலீஸ் போக்குவரத்து துணை முதன்மை வார் டன் கலந்து கொண்டார்.

நிர்மலா மகளிர் கல்லூரியின் சாலை பாதுகாப்புப்படையின் ஒருங்கிணைப்பாளர்களும் சாலை பாதுகாப்புப்படையினர் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img