தூத்துக்குடியில் ம.தி.மு.க வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் வே.இரஞ்சன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சிராஜ், வடக்கு மாவட்டதுணை செயலாளர்கள் தெய்வேந் திரன், எஸ்.எஸ். கணேசன், பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன் சிங் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாள ராக மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் கலந்து கொண்டு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக சில கருத்துகளை எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் ஆகஸ்ட் 9 ல் தூத்துக்குடி வருகை தரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வெளி யேற்றம் குறித்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் வை.கோவுக்கு உற்சாக வரவேற்பளிப்பது,
திருச்சியில் செப்.15 பேரறிஞர் அண்ணா துரையின் 117 வது பிறந்த நாள் விழாவில் மாநில மாநாடு குறித்த ஏற்பாடு உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங், கலை இலக்கிய அணி துணை செயலாளர் தராசு மகாராஜன், நகர செயலாளர் பால்ராஜ், அனல் செல்வராஜ், தொம்மை, முத்து செல்வன், காலாங்கரை கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விளாத் திகுளம் மணி, பலவேச பாண்டியன், சரவணன் வள்ளிமுத்து, காளிச்சாமி, வீரபாண்டி சரவணன், ஆழ்வை. ஜெயக் கொடி, பாண்டியன், பி.எஸ் முருகன், மாரிச்சாமி, ராஜ்குமார், செந்தூர் பாண்டி, கோடை இடி ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப் பாளர் அருண்குமார், இளைஞ ரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், தொண்டர் படை நாசரேத் கணேசன், எம்.எல்.எப் நிர்வாகிகள் கஜேந்திரன், காசி, குமார், கார்த்திக், மாரிமுத்து, பொன்ராஜ், வேம்பன், ம.தி.மு.க பிரதிநிதிகள் பால்ராஜ் நாயக்கர்,பொய்யாமொழி, ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய கிளைக் கழகம் மற்றும் தொண்டர்கள் ஏராள மானோர் கலந்து கொண் டனர். முடிவில் மாநகர செயலாளர் முருகபூபதி நன்றி கூறினார்



