சிதம்பரத்தில் தமிழ் நாடு அரசு திறன் மேம் பாட்டுக் கழகம், கடலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் முனை வோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் இணைந்து நகை தயாரிப்பு பயிற்சி கலைஞர் கைவினை திட்டத்தின் மூலம் நடை பெற்றது.
இந்த பயிற்சி நிகழ்ச்சியில் 31 பயிற்சியாளர்கள் பங்கேற்று, நகை வடி வமைப்பு மற்றும் உத்திகள் வடிவமைப்புப் பொருட்கள் தயார் படுத்துவதற்கான வணிக பயிற்சிகளை முறையாக பெற்றனர்.
சந்தை குறித்து பயிற்சி திட்டம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் செய்யப்பட்டது. பயிற்சி முகாமை ஐ.ஈ.டி.மேலாளர் செந்தில் மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத் தினர்.
பயிற்சி நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவில் விருந்தினர்கள் தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சிறப்பு சங்க மாநில தலைவர் சேகர், முத்துக்குமார்,மோகன், முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன மேலா ளர்கள் கலந்து கொண்டு பயிற்சி முடித்த அனைத்து பயிற்சி பெற்றவர்களுக்கும் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினர்.
கடலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார் வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்ச்சி இளையதலை முறையினர் மற்றும் பெண்கள், நகை தயாரிப் பில் வகையில் மிக முக்கிய பயிற்சியாக அமைந்தது என தெரிவித்தனர்.



