டாக்டர் அருண் பழனி சாமி முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சி ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் பிறந்த இவர் தாய்நாட்டிற்கு திரும்ப வந்து மணிபால் மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். அதன்பிறகு அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடர்ந்து இண்டர்னல் மெடிசினில் எம்டி பட்டம் பெற்றார். அமெரிக்காவில் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 2015-ல் இந்தியா திரும்பி கேஎம்சிஹெசில் தனது மருத்துவப் பணியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் இவருக்கு கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு ஒரு முன்னிலை இடத்தை உரு வாக்கிய காரணங்களுக்காக பெருமை மிகு எம்பிஏ விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக எம்பிஏ விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 13-ம் தேதி ஹோட்டல் லீ மெரி டியனில் நடைபெற்றது. இந்த விருதுக்காக தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நபர்களில் டாக்டர் அருண் பழனிசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



