fbpx
Homeபிற செய்திகள்கோவை கீரணத்தம் அரசு பள்ளியில் மாதிரி வாக்களிக்கும் செய்முறை நிகழ்ச்சி

கோவை கீரணத்தம் அரசு பள்ளியில் மாதிரி வாக்களிக்கும் செய்முறை நிகழ்ச்சி

கோவை கீரணத்தம் அரசு நடுநிலை பள்ளியில், தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் வாக்களிக்கும் இயந்திரத்தில் மாதிரி வாக்களிக்கும் செய்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி மாணவர்களிடையே வலுவான வாக்களிக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், முழு வாக்குப்பதிவு செயல்முறை குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம், கோவை கீரணத்தத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் மாணவர் பாராளுமன்ற மாதிரி தேர்தலை நடத்தியது. பள்ளியின் பயிலும் 30 மாணவர்கள் போட்டியிட்டனர். 5 பேர் முதல்வர் பதவிக்கு மற்றவர்கள் பல்வேறு கேபினட் அமைச்சர் பதவிக்கு பட்டியிட்டனர். தேர்தலில் 241 மாணவர்கள் வாக்களித்துள்ளனர்.

உண்மையான தேர்தல் எப்படி நடக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இந்த செயல்முறை நடத்தப்பட்டது.
வாக்குச் சாவடி உருவாக்கப்பட்டு 4 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், கோவையில் மாணவர் பாராளுமன்ற மாதிரி தேர்தலில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் வாக்களிக்கும் இயந்திரம் இவிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

பாஷ் இன் தன்னார்வலர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை பள்ளியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்தித்து பள்ளியில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். பாஷ் ஜெர்மனியை தளமாகக் கொண்ட பொறியியல் நிறுவனமானது கடந்த 1.5 வருடங்களாக அதன் சிஎஸ்ஆர் நிதி மூலம் இந்தப் பள்ளிக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்து வருகிறது. இது பள்ளியில் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக கோயம்புத்தூர் குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கம் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்வு எதிர்காலத்திற்கான சிறந்த அடித்தளமாகும், மேலும் தேர்தல்களில் பங்கேற்று அவற்றில் போட்டியிடும் இந்த நடைமுறையானது நீங்கள் தலைவர்களாகவும், உங்களிடையே உள்ள மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யவும் உதவும் என்று கோவை பாஷ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஆனந்த் வெங்கடேசன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு வருவாய்க் கோட்ட அலுவலர் பி.கே. கோவிந்தன், கீரணத்தம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, கோவை பாஷ் சமுதாய பொறுப்பு அதிகாரி இம்மானுவேல் அல்போன்ஸ், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபலன்சி, ஆகியோர் கலந்துகொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img