ஈரோடு திண்டல் வேலாயுதசாமி கோவிலில் ரூ.3 கோடி மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளவும் ரூ.2 கோடி மதிப்பில், புதியதாக சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
இதில், ஏற்கனவே ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள் கட்டுவதற்கான கால்கோள் விழா மற்றும் ராஜகோபுரத் திற்கு நிலைக்கால் வைக்கும் விழா நடந்தது.
இதில், அமைச்சர் முத்துசாமி, பிரகாஷ் எம்.பி, கோவில் செயல் அலுவலர் சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் எல்லாப்பாளையம் சிவகுமார், வேலாயுத சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.