இந்தியாவின் கியருள்ள முதல் எலக்ட்ரிக் மோட்டார் பைக்கான MATTER AERA, அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 40,000 ஆர்வமுள்ள பைக் சவாரி செய்பவர்களின் இதயங் களைக் கவர்ந்துவிட்டது. விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
MATTER AERA வழக்கமான மோட்டார் பைக் மட்டுமல்ல, களிப்பூட்டும் மற்றும் உமிழ்வு இல்லாத அனுபவத்தை வழங்குவதால் – MATTER AERA எதிர்காலத்தில் சவாரி செய்வதில் வரும் உருமாற்றத் திற்கான முன்னுதாரணமாகவும் இருக்கப் போகிறது.
இந்தியாவிலும் விரைவில் உலகெங்கிலும் உண்மை யான நீடித்து உழைக்கும் மோட்டார் பைக் சவாரியை விரைவுபடுத்துவதில் MATTER-ற்கு உள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடானது ஒவ்வொரு முன்பதிவுடனும் மேலும் தூண்டப்படுகிறது.
MATTER-ன் நிறுவனர் மற்றும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹல் லால்பாய் கூறியதாவது: சவாரி செய்வதன் எதிர்காலத்தை நாங்கள் மறுவரையறை செய்ய தயாராக உள்ள நிலையில், நுகர்வோர் இந்த மாற்றத்தை பின்பற்றுவதில் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது.
முன்பதிவு செய்ய மக்கள் காட்டிய ஆர்வம், எதிர்கால தொழில்நுட்பத்தை நோக்கி அவர்கள் சாய்வதற்கான சான்றாகும். ஃபிளிப்கார்ட் மற்றும் OTO கேபிடல் உடன் செய்யப்பட்ட எங்கள் கூட்டாண்மை, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் நீடித்துழைக்கும் இயக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை திறம்பட ஈர்த்துள் ளது.
இது MATTER-ன் உருமாறும் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சவாரி செய்வதன் எதிர்காலத்தை மறுவரையறை செய்வதில் எங்களுடன் இணைந்திருக்கும் மோட்டார் பைக் ஆர்வலர்களுக்கு நன்றி கூறுகிறோம் என்றார்.