மாருதி சுசூகி இந்தியா அதன் டீலர் கூட்டாளியின் ஆதரவுடன், இந்தியாவில் அதன் 5,000வது ARENA சர்வீஸ் டச்பாயிண்டை அமைப்பதாக அறிவித்தது.
கோயம்புத்தூரில் அமைந்துள்ள இந்த மைல்கல் வசதி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிமையான மற்றும் மகிழ்ச்சிகரமான கார் உரிமை அனுபவத்தை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மாருதி சுசூகி அதிகாரிகள், சேவை நிர்வாக அதிகாரி ராம் சுரேஷ் அகெல்லா மற்றும் சேவை நிர்வாக துணைத் தலைவர் தகாஹிரோ ஷிரைஷி ஆகியோர் கோயம்புத்தூரில் இந்த வசதியைத் திறந்து வைத்தனர்.
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக் குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டகேயுச்சி கூறுகையில், “மாருதி சுசூகி 2024-25 நிதியாண்டில், ARENA மற்றும் NEXA சேனல்களின் கீழ் 460 சர்வீஸ் டச் பாயிண்டுகளைத் திறந்தோம், மேலும் 2025-26 நிதியாண்டில், எங்கள் நெட்வொர்க்கில் மொத்தம் 500 சர்வீஸ் ஒர்க்ஷாப்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்தப் புதிய தொடர்பு மையத்தின் சேர்க்கையுடன், மாருதி சுசூகியின் சர்வீஸ் வலையமைப்பு இப்போது 5,640க்கும் மேற்பட்ட சர்வீஸ் டச்பாயிண்ட் டுகளை அதிகரித்து, இந் தியா முழுவதும் 2,818 நகரங் களை உள்ளடக்கியது.
ஏப்ரல்- செப்டம்பர் 2025 இல், நிறுவனம், அதன் நெட்வொர்க் மூலம், நாடு முழுவதும் 14 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களுக்கு சர்வீஸ் செய்துள்ளது. விரிவான நெட்வொர்க் ஒரு வருடத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் வாகனங்களுக்கு சர்வீஸ் செய்யும் திறனைக் கொண்டுள்ளது.



