சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் உயிரியல்துறை, மீன் நோயெதிர்ப்பு ஆய்வகம் மற்றும் எஸ்சிஎஸ்-ஐசிஏஆர் ஆகியவை இணைந்து,சிறு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் குறித்த 3 நாள் பயிற்சி மற்றும் களப்பணி விளக்க நிகழ்ச்சி மற்றும் பட்டறையை நேற்று (புதன்கிழமை) தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் மீன்வளத் துறையில் கவனம் செலுத்துதல் மற்றும் அதன் கருப்பொருள் பற்றிய இதில் பட்டியலிடப்பட்ட மாணவர்கள் விவசாயிகள் மீனவ மக்களின் இளம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களிடையே வணிக வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வாய்ப்புகளை தெளிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத் தலைவர்கள்,கொச்சின் ஐசிஏஆர்-சிஐஎப்டி இயக்குநர் டாக்டர்.ஜோர்ஜ் நினன், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி மற்றும் பதிவாளர் (பொறுப்பு) எம்.பிரகாஷ் ஆகியோர் ஆவர்.
நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலில் சிஏஸ் இணைப் பேராசிரியர் டாக்டர் பி.தெய்வசிகாமணி ஏற்பாடு செய்து இருந்தார்.
இதில் செயலாளர் பிந்து ஜே,கொச்சின் ஐசிஏஆர்- சிஐஎப்டி மீன் பதப்படுத்துதல் பிரிவுத் தலைவர் டாக்டர் நிகிதா, பிரிவுத் தலைவர் டி.ராமநாதன்,கடல் உயிரியலில் சிஏஎஸ் இயக்குநர் எஸ்.ஸ்ரீராம்,டீன் ரேணுகா,விஞ்ஞானி டாக்டர் ஜெயகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



