fbpx
Homeபிற செய்திகள்சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் கேபிஆர் கல்லூரிக்கு வருகை

சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் கேபிஆர் கல்லூரிக்கு வருகை

சிங்கப்பூர் பல்கலைக் கழக மாணவர் குழுக்கள் கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII இந்தியா) மற்றும் சிங்கப்பூர் இந்தியா ஊக்குவிப்பு அறக்கட்டளை உடன் இணைந்து “இந்தியா அனுபவம்“ திட்ட நிகழ்வு நடைபெற்றது.

நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் (NTU), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU) மற்றும் சிங்கப்பூர் சமூக ஆய்வுகள் பல்கலைக்கழகம் (SUSS) ஆகியவற்றின் மாணவர் பிரதிநிதிகள் சிறப்பு மைய வசதிகளைப் பார்வையிட்டனர்.

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் சர்வதேச மாணவர்களுடன் உரையாடினர். கேபிஆர் சர்வதேச மையம் – தொழில் நிறுவன
கூட்டாண்மை பிரிவு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது.

படிக்க வேண்டும்

spot_img