fbpx
Homeபிற செய்திகள்மீண்டும் மஞ்சப்பை திட்டம்: தமிழக அரசின் முதல் பரிசை வென்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி

மீண்டும் மஞ்சப்பை திட்டம்: தமிழக அரசின் முதல் பரிசை வென்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகமும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுக்களின் பயன்பாட்டை ஊக்கு விக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை 2023-&2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

தமிழக அளவில் இத்திட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரிகளில் மிகச்சிறப்பாகச் செயல் பட்ட பெருந்துறை கொ ங்கு வேளாளர் தொ ழில் நுட்பக்கல்லூரி அறக்கட் டளையின் கீழ் இயங்கும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி 2023- 2024 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது மற்றும் முதல் பரிசான 10 லட்சம் ரொக்கப் பரிசும் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு 28.08.2024 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதனால் விருது வழங்கப்பட்டது.

மஞ்சப்பை விருதுத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இவ்விருது கிடைப்பதற்கு காரணமாக இருந்த கல்லூரியின் முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனை வருக்கும் அறக்கட் டளையின் தலைவர் மருத்துவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் மற்றும் கல்லூரியின் தாளாளர் தங்கவேல் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img