Homeபிற செய்திகள்கோ ஆப்டெக்ஸ் அதிகாரி பணி ஓய்வு

கோ ஆப்டெக்ஸ் அதிகாரி பணி ஓய்வு

கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்தவர் எஸ். அன்பரசு, இவர், 1987 ம் ஆண்டு முதல் கடந்த 38 ஆண்டுகளாக கோஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

தற்போது, ஈரோடு மாவட்டம், சென்னிமலை சரக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளராக பணியாற்றி நேற்று பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சென்னிமலை அம்மன் காட்டேஜில் நடந்தது. இதில், எல்.பி.எப்., தொழிற்சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

கே ஆப் டெக்ஸ் அதிகாரிகள் மோகன்குமார், பிரேம்குமார், துரைமுருகன், நடராஜ், பிரதம கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர்களான இந்திரா டெக்ஸ் சுகுமார், ரவி, கொங்கு டெக்ஸ் ராஜா, பி.கே., புதூர் டெக்ஸ் மூர்த்தி, மெட்ரோ டெக்ஸ் வெள்ளியங்கிரி, , ஜீவா டெக்ஸ் பூபதி, சென்டெக்ஸ் அப்புசாமி, தியாகராஜன், சிதம்பரம், உட்பட தமிழகம் முழுவதும் இருந்து கோ ஆப்டெக்ஸ் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற எஸ்.அன்பரசுவை பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img