தமிழ்நாடு வேளா ண்மைப் பல்கலைக்கழக வேளாண் பூச்சியியல் துறை மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் (சென்னை) இணைந்து மதுரம் திட்டத்தின் கீழான பாலமலை மாவட்ட பழங்குடியின மக்களுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
மதுரம் திட்டத்தின் முக்கிய குறிக்கோளுடன் தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவதும் ஆகும். பெரியநாயக்கன்பாளையம் தொகுதி நாயக்கன் பாளையம் பஞ்சாயத்து பாலமலை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களிடையே அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பை ஊக்குவித்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல் மேம்படுத்துதல் குறித்த பயிற்சி பல்கலைக்கழக பேராசிரியர்கள் பழங் குடியின மக்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியை அளித்தனர்.
பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர் வாசாமிநாதன், இந்திய தேனீ கூடுகளை ஆய்வு செய்வதன் முக்கிய த்துவத்தை விளக்கினார். பழங்குடியின மக்களுக்கு பல்வேறு தேனீ இனங்கள், வகைகள் மற்றும் தேனீக்கூட்டின் அமைப்பு ஆகியவற்றை விளக்கினார்.
மேலும் பூச்சியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் பிரீத்தா, தேனீ வளர்ப்பு உபகரணங்களைக் கையாளுதல் மற்றும் பயன்கள் தொடர்பான தொழில்நுட்ப அமர்வைக் கையாண்டார் கோடை மற்றும் குளிர்காலம் போன்ற பற்றாக்குறை காலங்களில் தேனீக்களுக்கு அளிக்க வேண்டிய செயற்கை உணவு பற்றியும் விளக்கமளித்தார்.