fbpx
Homeபிற செய்திகள்‘மெட்ராஸ் ஆன் மியூசிக்’ வரும் 29,30-ல் நடக்கிறது

‘மெட்ராஸ் ஆன் மியூசிக்’ வரும் 29,30-ல் நடக்கிறது

ஏசிடிசி (ACTC) ஸ்டுடியோ, ஆர்ட் 64 உடன் இணைந்து சென்னையின் முதல், உலகளாவிய இண்டிபென்டன்ட் கலைஞர்கள் இசைவிழாவான, ‘மெட்ராஸ் ஆன் மியூசிக்’, #நம்ம ஊரு, #குளோபல் சவுண்ட்” என்ற ட்ரெண்டிங் டேக்லைனுடன், வரும் 29, 30 ஆகிய தேதிகளில், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் ஆதித்யராம் பேலஸ் சிட்டியில் நடைபெற உள்ளது.

இரண்டு நாள் நிகழ்ச்சிக்கான டிக்கெட் பாஸ்கள் ரூ.999 முதல் தொடங்குகிறது.
புகழ்பெற்ற சர்வதேச கலைஞர்களான ஊர்கா, யோகி பி அண்ட் நட்சத்ரா, ஆன்டனி குழுவினர், ஷான் ரோல்டன் மற்றும் நண்பர்கள், ஸ்டீபன் ஜெகரியா, ஊராளி, டிரம் ஃபைட்டர்ஸ், ஜானு, ஸ்க்ராட், 7 பந்தாய்ஸ், மாபுல்ஸ், கபேர் வாசுகி, பால் ஜேக்கப் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சி நிரலில் ஒத்தசெவுரு, அம்மார் 808, மதுரை சோல் ஜோர், டிஜே உரி, மற்றும் பேப்பர் குயின், பால் டப்பா, டெவோயிட், கவின் மற்றும் தி புலி கேட்ஸ், ஐக்கி பெர்ரி, நவ்ஸ்-47 ஆகியோர் மேடையை அலங்கரித்து, தொகுப்பாளரின் பின்னணியில் இசை விழாவை நிகழ்த்துவார்கள்.

‘இதயத்தை துடிக்க வைக்கும் ஈடிஎம், பாப், தற்கால, ஹிப்-ஹாப், நாட்டுப்புற, ரெக்கே மற்றும் பல இசை வகைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

வேடிக்கை வகை, ரசிகர் வகை, சந்தை வகை, பொதுவான வகை ஆகிய 4 வகைகளில் நிகழ்ச்சி இருக்கும்’ என்று ஏசிடிசி ஸ்டூடியோவின் நிறுவனர் ஹேமந்த், ஆர்ட் 64 இன் நிறுவனர் சந்தோஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

மெட்ராஸ் ஆன் மியூசிக்கிற்கான டிக்கெட்டுகள் இப்போது https://actcevents.com/madras-on-music/ இல் கிடைக்கும் அல்லது மொத்தமாக வாங் குவதற்கு +91 90030 67774 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img