fbpx
Homeபிற செய்திகள்ரூ.10 ஆயிரம் விலைப்பிரிவில் ஐக்யூஓஓ ‘ஸ்மார்ட்போன்’ அதீத வளர்ச்சி

ரூ.10 ஆயிரம் விலைப்பிரிவில் ஐக்யூஓஓ ‘ஸ்மார்ட்போன்’ அதீத வளர்ச்சி

சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ, தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட் போன் விலைப் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத் தவரை இந்நிறுவனம் ஈட்டி வரும் அதிக வருவாயில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் சமீ பத்தில் அறிமுகம் செய்த நியோ 7 புரோ ஸ்மார்ட் போனின் முதல் நாள் விற்பனையானது சாதனை படைத்தது.

அதோடு அதன் பியர்லெஸ் பிளேம் ஸ்மார்ட்போன் விற்பனை யானது துவங்கிய சில மணி நேரங்களிலேயே விற் றுத் தீர்ந்தது.

நியோ 7 புரோவுக்காக ‘தூங்காத நட்சத்திரம்’ என் னும் தலைப்பில் புதிய டிஜிட்டல் விளம்பரத்தை வெளியிட்டது. விளம்பரத் தில் நடிகர் துல்கார் சல்மான் நடித்துள்ளார்.

இதற்கு முன் ஐக்யூஓஓ 11 ஸ்மார்ட்போன் விளம்பரத்தில் விஜய் தேவரகொண்டா மற் றும் ஜான்வி கபூர் நடித்திருந்தனர். இந்நிறுவனத்தின் இசட் மாடல் ஸ்மார்ட் போன் விற்பனையானது தமிழ் நாட்டில் 2 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா கூறியதாவது:
எங்கள் செயல்பாடுகள் துவங்கிய 4 ஆண்டுகளுக்குள், தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்ட்களில் ஒன்றாக எங்கள் பிராண்டும் இணைந்து விட்டது.

சமீபத்திய வரவான நியோ 7 புரோ வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மேலும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வோம் என் றார்.

படிக்க வேண்டும்

spot_img