fbpx
Homeபிற செய்திகள்கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவைத் தேர்தலில் வென்றோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் பேரவைத் தேர்தல் ஜன நாயக முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நடந்த தேர்தலில் வென்றவர்களுக்கான பதவி ஏற்பு விழாவில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தன்னார்வ பேரிடர் மீட்ப்புப்படை டெல்டா அணியின் கமாண்டர் லெப்.ஈசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மாணவர்களுக்கு பேட்ஜ்களை வழங்கி அவர் பேசும்போது, கடுமையான உழைப்பும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பள்ளி முதல்வர் மாணவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பல்வேறு பிரிவுகளில் தலைமைப் பொறுப்பை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இந்த ஆண்டு இப்புதிய பேரவை நிர்வாகிகள் பதவியில் இருப்பார்கள்.

படிக்க வேண்டும்

spot_img