fbpx
Homeபிற செய்திகள்திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா

திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா

சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள திரு இருதய ஆண்டவர் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம்.அதுபோல் இந்த ஆண்டு ஜூலை மாதம்19ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது .

இதில் ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலியானது அருட்திரு ஆர்.சுந்தர்ராஜ் அடிகளார் பங்குத்தந்தை தலைமையிலும் உதவி பங்கு தந்தையான அருட்திரு ஸ்வீட்டன் தலைமையிலும் நவநாள் திருப்பலிகள் ஒவ்வொரு நாளும் மாலை நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இறைவார்த்தைகளில் திருப்பலிகள் நடைபெற்றது “இருக்கிறவர் நானே” “நல்ல ஆயன் நானே” “நானே உலகின் ஒளி” “நானே வாயில் ” “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” “நானே போதகரும் ஆண்டவரும்”  “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே” “வாழ்வு தரும் உணவு நானே” “நானே திராட்சைச் செடி” போன்ற இறைவார்த்தையில் அருட்தந்தையர்கள்  சூசை மணி ,ஸ்வீட்டன்,லூகாஸ், இருதயசாமி,பிரான்சிஸ் சேவியர்,டோணி,ஆரோக்கிய ஸ்டீபன் ராஜ்,மைக்கில் மகிழன்,சுந்தர்ராஜ் அடிகளார் போன்றவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்கள். 

9-வது நாளான சனிகிழமை சிதம்பரம் கனகசபை நகர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து மிக்கேல் சம்மனசு , சூசையப்பர்,புனித அந்தோனியார்,ஆரோக்கிய மாதா திரு இருதய ஆண்டவர் என 5 தேர்கள் மந்திரிக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிதம்பரம் பிரதான வீதிகளான 4 வீதி வழியாக வலம் வந்தது.

இதில் பங்கு மக்கள் அனைவரும் இயேசுவின் புகழைப் பாடிக் கொண்டும் ஜெபித்துக் கொண்டோம் ஜெபமாலை சொல்லிக் கொண்டும் பவனி வந்தார்கள். பவனியானது மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது . நிறைவு நாளான ஞாயிற்றுகிழமை நேற்று காலை 8 மணிக்கு திருப்பலி உடன் கொடி இறக்கமும் நடைபெற்றது.இந்த ஒவ்வொரு நவநாட்களிலும்  மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ராஜமாணிக்கம்,ஸ்டாலின்,ஸ்டீபன்,சின்னையன்,வல்லப தாஸ்,வில்சன்,இளையராஜா, சாமுவேல்,மோகன்,ஜார்ஜ்,லாரன்ஸ்,சார்லஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img