கிருஷ்ணகிரியில் சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் சுவாமிகள் கோயில் 353வது ஆராதனை மகோத்சவ விழா நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திரர் ஸ்வாமிகள் கோயிலில், 353வது ஆராதனை மகோத்ஸவ விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு துவங்கியது.
இதையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், ராம நாம ஜெபமும், வாசவி கான லஹரி குழுவினரின் பஜன் நிகழ்ச்சியும், ஸகஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், பஜனா மண்டலியினரின் பஜனையும், ஸஹஸ்ர நாம அர்ச்சனையும், மாலை, ராகவேந்திரர் ஸ்வாமியின் திருவீதி உலாவும் நடந்தது.
இந்நிலையில் நேற்று, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம் மற்றும் தும்கூர் மருத் ஆச்சாரின் உபந்யாசமும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல், கிருஷ்ணகிரி செந்தில்நகரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில், ஆராதனை மகோத்ஸவ விழாவையொட்டி, சுப்பரபாதம், நிர்மால்ய அபிஷேகம், வேத பாராயணம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களார்த்தி, தீர்ப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன.



