பெண்கள் பாதுகாப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரேலா மருத்துவமனை சென்னை சைக்ளிஸ்ட்ஸ் அமைப்புடன் இணைந்து சைக்ளத்தான் நடத்தியது.
125 கிமீ தூரத்திற்கான “ஃபிரீடம் 125” மற்றும் 40 கிமீ தூரத்திற்கான “விடுதலை 40” சைக்ளத்தான் நிகழ்வுகளில் இம்மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏறக்குறைய 500 நபர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். இளங்குமரன் கலியமூர்த்தி, கௌரவ விருந்தினர் டாக்டர். எம்.ஆர். சௌந்தரராஜன், சர்வதேச சைக்ளிஸ்ட், சிறப்பு விருந்தினர்கள் பத்மினி ஜானகி, தலைமை செயல் அலுவலர், இணை நிறுவனர், “மைண்ட் அண்ட் மாம்“ மற்றும் ரேலா மருத்துவமனை இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி பிரிவின் தலைவர் டாக்டர் தீபஸ்ரீ ஆகியோர் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் காலை 5.30 மணியளவில் கொடியசைத்து சைக்ளத்தான் நிகழ்வுகளை தொடங்கி வைத்தனர்.
மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட பங்கேற்பாளர்கள் மதிய உணவு நேரத்தில் சைக்ளத்தான் தொடங்கிய அதே இடத்திற்கு திரும்பவும் வந்து சேர்ந்தனர். 16 முதல் 70 வயது பிரிவைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கவசங்களை அணிந்து இதில் பயணித்தனர்.
இந்நிகழ்வில் சென்னை சைக்ளிஸ்ட்ஸ்-ன் முக்கிய உறுப்பினர் அனில் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.