தூத்துக்குடி பழைய நகராட்சி வளாகத்தில் உள்ள கிழக்கு மண்டல அலுலவகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா வரவேற்புரையாற்றினார்.
முகாமை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: இந்த முகாமில் கொடுக்கப்படும் ஓவ்வொரு மனுக்களையும் முறையாக பதிவு செய்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்ற பின் பல்வேறு பணிகளை முறையாக மேற்கொண்டு வருகிறோம்.
30 நாட்களுக்குள் கொடுக்கும் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் அந்த மனுக்களுக்கு தீர்வு குறித்து சம்பந்தபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பபடுகிறது. தூத்துக்குடியில் பிரதான சாலைகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்டு பல்வேறு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்த பழைய கட்டிடங்களை முறைப்படுத்தியும் புதிதாக கட்டுவதற்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த கிழக்கு பகுதியில் தான் வியாபார பெருங்குடி மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் பல பணிகளையும் செய்து வருகிறோம். மழை புயல் உள்ளிட்ட காலக்கடங்களில் மாநகராட்சி வளர்ச்சிக்கு குறிப்பாக மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் எல்லா துறை அதிகாரிகளும் முழுமையாக ஓத்துழைத்ததின் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சிறந்த இரண்டாவது மாநகராட்சி என தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் பரிசு பெற்றுள்ளோம்.
இதற்கு முழுமையாக துணையாக நின்ற கனிமொழி எம்.பி அமைச்சர்கள் கீதாஜீவன் நேரு, பத்திரிகை துறையைசார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுடைய பணி தொடர்ந்து மக்களுக்கான பணியாகவே இருக்கும் தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் குடிதண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை ஆணையர் ராஜாராம், துணை பொறியாளர் முனீர் அகமது, நகர் நல அலுவலர் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் செல்வம், கவுன்சிலர்கள் ராமு அம்மாள், ரிக்டா, மும்தாஜ், பேபி ஏஞ்சலின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, முன்னாள் கவுன்சிலர் ஆனந்தராஜ், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் (பொ) மனோஜ்குமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர்மச்சாது, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜோஸ்பர், பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.