கிருஷ்ணகிரி ஒன்றியம் செம்படமுத்தூர் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பில், பொட்டம்மாள் வீடு முதல் சின்னதம்பி வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
அதே போல், கிருஷ்ணகிரி அருகில் உள்ள தொன்னையான் கொட்டாய் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், வெங்கட்ராமன் வீடு முதல் சூரன் வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைக் கப்படுகிறது.
இந்த இரண்டு பணிகளையும், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, பஞ்., முன்னாள் துணைத் தலைவர் வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் சந்திரகுமார், வர்த்தக அணி துணை செயலாளர் ஜேம்ஸ், கவுன்சிலர்கள் ஜெயரா மன், மகேந்திரன், சங்கீதா சரவணன், காளி ரத்னம், கிளை செயலாளர் பரந்தாமன், அண்ணா தொழிற் சங்கத் தலைவர் நாராயணன், மாவட்ட ஓட்டுனர் அணி இணை செயலாளர் சின்னராஜி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முருகன், அம்மா பேரவை ஒன்றிய துணை செயலாளர் அசோகன், அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளர் முருகன், இலக்கிய அணி மாவட்ட இணை செயலாளர் பெரியசாமி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி ஒன்றிய செயலாளர் ரமேஷ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரமேஷ், அம்மா பேரவை ஒன்றிய பொருளாளர் செல்வம், கட்சி பிரமுகர்கள் நாராயணன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.