நந்தா சித்த, ஆயுர்வேத, இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன், அங்கத்தினர் பானுமதி சண்முகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி கல்லூரி முதல்வர்கள் எம்.மேனகா, கிருத்திகா மற்றும ரீவிஸ் ஜஸ்ட்லின் தாஸ் வரவேற்புரை நிகழ்த்தினர்.