fbpx
Homeபிற செய்திகள்கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்

கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்

மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகமும் கலைகளுக்கான இந்திராகாந்தி தேசிய மையமும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்திய பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினச் சொற்பொழிவுகள் ஆகஸ்டு 11, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முனைவர் மா.ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.

11ம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்வில் பாரதியார் பல்கலைக் கழக செனட் உறுப்பினரும் எழுத்தாள ருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார் பங்கேற்றுச் சிறப்பித்தார். மறுநாள் (12ம் தேதி) நடைபெற்ற நிகழ்வில் பத்திரிகையாளர் ராஜேஷ் கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்றுப் பேசினார்.

14ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் மேகாலயா மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் வி. சண்முகநாதன் சிறப்பு விருந் தினராகக் கலந்து கொண்டு சொற் பொழிவாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அமர்வில் ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் என்.கே.ராமன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி, கல்லூரி மேலாண்மைக் குழுவின் பொருளாளர் மருத்துவர் ஓ.என்.பரமசிவன் ஆகியோர் தலைமையுரையாற்றினர்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.லச்சுமணசாமி முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் வரவேற்புரை மற்றும் நன்றியுரை நல்கினர்.

இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள் நால்வரும் இந்தியத் திருநாட்டின் பெருமையையும் தேசப் பிரிவினையால் மக்கள் அடைந்த துயரத்தையும் நினைவுகூர்ந்தனர்.

இந்தியாவின் சுதந்திர நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற அதே வேளையில் பிரிவினைக் கொடுமையால் தங்களின் உடல், பொருள், உயிரை நீத்த பல லட்சக்கணக்கானவர்களின் சோகங்களையும் துயரங்களையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒன்றபட்ட பாரத தேசம் துண்டாடப்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.

வருங்காலத்தில் மீண்டும் பிரிவினையை நாடு சந்திக்கக் கூடாது, அது மிகக் கொடு மையானவை என்றும் இதனை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நிகழ்வில் மாணவ-மாணவியரும் கல்லூரிப் பேராசிரியர்களும் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img