fbpx
Homeபிற செய்திகள்மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 முதல் 20 வரை சிறப்பு முகாம்கள்

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 முதல் 20 வரை சிறப்பு முகாம்கள்

கோவையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கம் வகையில் ஆகஸ்ட்ட 18 முதல் 20ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என்று ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பட்டணம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார்.

இதில், அவர் பேசியதாவது: மக்கள் தங்களுக்குத் தேவையான திட்டங்களை தாங்களே வகுப்பதற்கான வழிகளை ஏற்படுத்தும் விதமாகத் தான் கிராம சபைக் கூட்டங்கள் நடைத்தப்பட்டு வருகின்றன.

இதில், கிராமத்துக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், இணைய வழியில் மனைப் பிரிவு, கட்டிட அனுமதி வழங்குதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் மிஷன், பிரதம் மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், தூய்மைப் பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப் புணர்வு, போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட 14 கட்டப் பொருட்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்காமல் விடுபட்டவர்களுக் காக ஆகஸ்ட் 18,19,20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் கள் நடைபெற உள்ளன. முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுகின்றவர்களும் இத்தி ட்டத்தில் பயன்பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.

எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில், உதவி ஆட்சியர் ஆஷிக் அலி, ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி செல்வகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர் துரை ராஜ், மகளிர் திட்ட இயக்குநர் (பொறப்பு) காசிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி, சதீஷ்குமார், சூலூர் வட்டாட்சியர் நித்திலவேணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img