fbpx
Homeபிற செய்திகள்ஜடையம்பாளையத்தில் கிராம சபை கூட்டம்

ஜடையம்பாளையத்தில் கிராம சபை கூட்டம்

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி தலைமையில் ஆலாங் கொம்பு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 75 உள்நாட்டு மரக்கன்றுகள் நடுதல் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த கணக்கெடுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரண்ணன், ஊராட்சி செயலாளர் நந்தினி,வார்டு உறுப்பினர்கள், காரமடை வட்டார சமூக நல பிரிவு அலுவலர் உமாராணி,கிராம நிர்வாக அலுவலர் மலர்மணி, மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img