கோவையில் கீர்த்திமான் சாய்சிட்டி இன்டராக்ட் கிளப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் தலைவர் கள் பதவியேற்பு விழா, கீர்த்திமான் அகாடமியில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3206 மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி நிர்வாகி கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், வரவேற்புரை, கடந்தாண்டு நிர்வாகத்தின் ஆண்டு அறிக்கை மற்றும் புதிய நிர்வாகக் குழுவினரின் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. புதிய தலைவராக இன்டராக்டர் ராகுல், செயலாளராக இன்டராக்டர் கிரிஷா ஆகியோர் பொறுப்பேற்றனர்.சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் டாக்டர் ஆர். பாலமுருகன் கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினர் ரொட்டேரியன் ஆர். ஹென்றி அமலராஜ் புதிய நிர்வாகிக ளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும் ரொட்டேரியன் துளசி சேது, ஏ. கோகுல் கிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டோர் மாணவர்களிடம் தலைமைத்துவம் குறித்து உரையாற்றினர்.



