இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து உள்ளிட்ட உலகளவில் 56 நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், கொங்கு மண்டலத்தின் ஜவுளித் தொழில் துறைக்கு மிகப்பெரிய வளர்ச்சிக் கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன.திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட கொங்கு மண்டலம், இந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் முதன்மை மையமாகத் திகழ்ந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் கூறிய தாவது: இங்கிலாந்துடனான ஒப்பந்தம் மூலம் 9.6 சதவீத இறக்குமதி வரி முழுமையாக ரத்தாகிறது. இதனால் திருப்பூர் பின்னலாடைத் துறை, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு நிகராகச் சந்தையில் போட்டியிட முடியும். ஆண்டுக்கு 20% முதல் 25% வரை ஏற்றுமதி வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள் போன்ற பொருட்களுக்கு ஐரோப் பிய சந்தைகளில் வரிவிலக்கு கிடைப்பதால் பாகிஸ் தானின் ஆதிக்கத்திற்குப் போட்டி யாகக் கரூரின் ஏற்றுமதி கணிசமாக அதி கரிக்கும். பதப்படுத்தப்பட்ட துணிகளுக்கான வரிகள் நீக்கப்படுவதால் ஈரோட் டின் விசைத்தறித் துறை நேரடியாக ஐரோப்பிய விநியோகச் சங்கிலியில் இணையும். ஆடைகளுக்கான உலகளாவிய தேவை அதிகரிப்பதால், உயர்தர நூல் உற்பத்தி மற்றும் ஜவுளி இயந்திரங்களுக்கான உள்நாட்டுத் தேவை அதிகரிக்கும்.
உலகச் சந்தை இலக்கு: உலகளாவிய ஜவுளி இறக்குமதி சந்தையின் மதிப்பு 900 பில்லியன் டாலர் ஆகும். இதில் இந்தியாவின் தற்போதைய பங்கு 4% மட்டுமே. வரும் 2030-க்குள் இந்திய ஜவுளி ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களின் எல்லை: இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள 56 நாடுகள், உலகளாவிய ஜவுளி இறக்குமதியில் 60 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன.
கொங்கு மண்டலத்தின் பங்களிப்பு: நாட்டின் ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும், வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கையும் இம்மையங்கள் வகிக்கின்றன.
ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த அரசு மற்றும் 11 ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
தூத்துக்குடி, சென்னை துறைமுகங்களில் ‘ஒற்றைச் சாளர அனுமதி’ முறை மற்றும் விரைவான சரக்கு போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.பஞ்சு மற்றும் செயற்கை இழை விலையேற்றக் காலங்களில் இறக்குமதி வரிகளைக் குறைத்து, நூல் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.ஈரோடு, திருப்பூரில் இயங்கும் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சர்வதேச தரத்திற்கு நவீனமயமாக்க வேண்டும்.திருப்பூர், ஈரோடு, கரூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழிகாட்ட ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் சார்பில் சிறப்பு வழிகாட்டுதல் மையங்களை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



