முல்லை அகாடமியா இன்டர்நேஷனலின் வெளிநாட்டு கல்விப் பிரிவான அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி மருத் துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு 2026-ஐ ஜூலை 25 (சனிக்கிழமை) கோவை தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் நடத்துகிறது. இதுகுறித்த அறிவிப்பு கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு சரியான மற்றும் நம்பகமான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளை நேரடியாகச் சந்தித்து, சேர்க்கை நடைமுறை, தகுதித் தரங்கள், கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகைகள், விடுதி வசதிகள், விசா நடைமுறைகள், மருத்துவ உரிமத் தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிந்தைய தொழில் வாய்ப்புகள் குறித்து முழுமையான விளக்கங்களைப் பெறலாம்.
மேலும், தகுதியான மாணவர்களுக்கு மாநாட்டு வளாகத்திலேயே உடனடி சேர்க்கை (On-the-Spot Admission) வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களுக்கான சர்வதேச கல்வி உதவித்தொகைகள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்வியின் சிறப்புகள் குறித்தும் நிபுணர்கள் விளக்கமளிக்க உள்ளனர்.
இம்மாநாட்டில் பிலிப்பைன்ஸின் செயின்ட் பால் பல்கலைக்கழகம், மலேசியாவின் யுனிவர்சிட்டி ஆஃப் சைபர்ஜெயா, மஹ்சா பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.எம்.எஸ். பீனிக்ஸ் குளோபல் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங் கேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாண வர்கள், பெற்றோர் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விருப்பமுள்ள அனைவரும் இம்மாநாட்டில் பங்கேற்று தனிப்பட்ட ஆலோசனைகளையும், பல் கலைக்கழக பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜய்சங்கர் அசோகன் செய்தியாளர்களி டம் பேசுகையில், வெளிநாடுகளில் மருத் துவக் கல்வி தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெறுவதற்கான சிறந்த தளமாக இந்த மாநாடு அமையும் என்றார்.
அரோரா ஓவர்சீஸ் எஜுகேஷன் சர்வீ ஸின் சர்வதேச ஆலோசனை உறுப்பினர் டாக்டர் பிரசன்னா அசோகன் பேசுகையில், இந்திய மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்வி மற்றும் கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்து நேரடியாக அறிந்து கொள்ளவும், சரியான பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்யவும் இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் விவரங்களுக்கு 90927 19193, 74488 19193 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



