fbpx
Homeபிற செய்திகள்கும்பகோணத்தில் கிறிஸ்துவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கும்பகோணத்தில் கிறிஸ்துவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறை மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்து பிறந்த திருநாள் விழா கொண்டாட்டம் கும்பகோணம் மறைமா வட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் ஏ.ஜே.சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கும்பகோணம் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் மாணவ மாணவிகள் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கிறிஸ்து பிறப்பை நாடக வடிவிலும் நடன வடிவிலும் ஆடல் பாடி காண்போர் அனைவரையும் மகிழ்வித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனை த்து கிறிஸ்து ஒன்றிணைப்பு செயலாளர் பெனடிக் பர்ன பாஸ், பாஸ்டர் ஞான தாஸ், ஜேக்கப் ஜெயராஜ், கும்ப கோணம் மறைமாவட்ட பங்கு தந்தைகள், அனைத்து கிறிஸ்துவை ஐக்கிய பேரவை நிர்வாகிகள், செயலாளர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img