நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் காளான் வளர்ப்பு தொழிலில் பயனடைந்த சுயஉதவிக்குழு பயனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் சந்தித்து பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்,
“கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வறுமையை குறைத்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சுய உதவிக்குழுக்களில் இணைந்த பெண்களுக்கு பல்வேறு விதமான கைவினைப்பொருட்கள் தயாரித்தல், உணவு பதப்படுத் துதல், காளான்வளர்ப்பு குறித்த பயிற்சிகள், சந்தைப்படுத்தல், அச்சகம், நர்ஸரி உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற் சிகள் வழங்கப்படுகிறது” என்றார்.
நிறைந்தது மனது நிகழ்ச்சியின் கீழ் காளான் வளர்ப்பு தொழிலில் பயனடைந்த திருப்பதிச்சாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த
திருவாழி மார்பன் சுயஉதவிக்குழுவை சார்ந்த உறுப்பினர் வேணி கூறுகையில்,
“தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் காளான் வளர்ப்பு தொடர்பாக ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைத்தது.
பயிற்சியில் காளான் வளர்ப்பது எப்படி? காளான் வளர்ப்பு கூடாரம் அமைப்பது, எப்போதும் ஒரே சீரான வெப்பநிலையை பராமரிக்க என்ன செய்யவேண்டும்? நோய் தொற்று எப்படி ஏற்படும்? முன்னெச்சரிக்கை மற்றும் விளைச்சல் பாதிக்கப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தெரிந்து கொண்டோம்.
பண்ணை சார் தொகுப்பு திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு அலகு அமைத்திட ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்கள். தற்போது திருப்பதிசாரம் ஊரா ட்சி கிராம பொது சேவை மையத்தின் ஒருபகுதியில் உற்பத்தி க்கான கட்டமைப்பை ஏற்படுத்தி காளான் உற்பத்தி செய்து வருகிறோம்.
என் போன்ற சாதாரண குடும்ப பெண்களையும் தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றனர்.