கோபி பிகேஆர். மகளிர் கலைக்கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பாக மாபெரும் அடர் வனம் அமைக்கும் திருவிழா 18.11.2024 முதல் 23.11.2024 வரை நடைபெறுகிறது.
துவக்க விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் ஜெகதீசன், கனகராஜ், ஜீவஜோதி சரவணன் கோபி வணிகர் சங்க நிர்வாகிகள் வேலுமணி, செல்வராஜ், சேகர், பொன்துரை, ஜெகநாதன், நிரஞ்சன்குமார், பசுமை நகர் ஃபோட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கண்ணன் வெங்கட்பிரபு, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவினை துவங்கி வைத்தனர்.
கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் பி.என்.வெங்கடாச்சலம் துணை முதல்வர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.ஏ.தனலட்சுமி கல்லூரியின்
பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு 500 மரக்கன்றுகள் நட்டு விழாவை சிறப்பித்தனர்.



