Homeபிற செய்திகள்அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்த கனிமொழி எம்.பி.

அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்த கனிமொழி எம்.பி.

எட்டயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12- லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6.5-லட்சம் பயணியர் நிழற்குடை கட்டிடத்தினையும்* கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

உடன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி, எட்டையாபுரம் பாரதி மில் முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img