fbpx
Homeபிற செய்திகள்18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் கடலூர் கலெக்டர் தகவல்

18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் கடலூர் கலெக்டர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 18 வயது நிறைவடைந்த இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்.இதில் 18 வயது நிறைவடைந்த இளைய தலைமுறையினர் முன்கூட் டியே தங்கள் பெயரினை பதி வுசெய்து கொள்ளலாம்.
வாக்காளர் பெயர் சேர்க் கைக்கு பிறகு உரியவருக்கு வாக்காளர் புகைப்படஅடையாள அட்டை வழங்கப்படும். வாக்காளர் பட்டியலினை https://elections.tn.gov.in இணையதளத்தில் காணலாம். மேலும்,தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் நகராட்சி, வட்ட வருவாய் கோட்ட நீ அலுவலகங்களை அணுகி வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்க்கலாம். 1.1.2025 அன்று 18 வயது நிரம்பிய மற்றும் தகுதியுள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெறும்.

இந்த ஆண்டு இரண்டு கட்டமாக இப்பணிகள் நடத்தப்பட உள் ளது. முதலில் வரைவு வாக்கா ளர் பட்டியல் தயார் செய்வ தற்காக நேற்று முன்தினம் முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை வாக்குச்சாவடி அலுவ லர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள் ளவர்களின் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். அப்போது இறந்தவர்களின் பெயர்,ஒரு வாக்காளர் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 19-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும்.

இதைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 29-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 29-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் முகாமில் பொதுமக்கள் நேரில் வந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்ததும் 2025 ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போது சில வாக்குச்சாவடிக்கை வாக்காளர்கள் பெயர் விடுபட்டு உள்ளது என மனுக்கள் வந்து உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் இந்த பணிகளில் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img