சென்னையை தலைமை இடமாக கொண்ட SAP மென்பொருள் சேவை களில் நிபுணத்துவம் பெற்றுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனமான கார் டெக். மற்றும் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள முன்னணி தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான A91 பார்ட் னர்ஸ் சேர்ந்து தனது பங்கு முதலீட்டை செய்துள்ளது.
இந்த முதலீடு சுமார் 250 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இம்முதலீட்டின் மூலம் A91 நிறுவனத்தின் பணியாளர்களான கௌஷிக் ஆனந்த், கவுதம் மகோ கார்டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக இணைய உள்ளனர். கார்டெக் நிறுவனம் 2006 ல் துவங்கப்பட்டது.
மென்பொருள் தயாரிப்பு, மற்றும் SAP டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் மூலம் உற்பத்தி தொழிச்சாலைகளுக்கு தேவையான தீர்வுகளையும், தானியங்கி சேவைகளின் உறுதுணையோடு உற்பத்தியை பெருக்கி லாபத்தை அதிகரிக்க எளிய வழிமுறைகளை வழங்கியதன் மூலம் கார்டெக் நிறுவனமானது மென்பொருள் சந்தையில் அபரீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
கார்டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாறன் கூறுகையில், ஏ91 நிறுவனத்துடனான கூட்டு தொழில் முயற்சி ஆனது கார்டெக் நிறுவனத்தை அதீத வளர்ச்சிப்பாதைக்கு வழிநடத்தி செல்வதோடு எங்கள் நிறுவனத்தினை பப்ளிக் லிஸ்ட்டெட் நிறுவனமாக பங்குச்சந்தையில் கொண்டு செல்லும் இலக்கை அடையவும் உதவிகரமாக இருக்கும்.
இந்த வளர்ச்சி திட்டம் மூலம் கார்டெக் நிறுவனமானது நாலாயிரம் பணியிடங்களை புதியதாக உருவாக்க வழிவகை செய்வதோடு அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் புதிய நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளவும் மற்றும் கிளைகளாக விரிவாக்கம் செய்யவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.