திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் வரும் 18, 19-ம் தேதிகளில் கோடை விழா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.
போளூரை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியத்தில், 2023-ம் ஆண் டுக்கான கோடை விழாவை நடத்துவது குறித்த ஆலோசனை, ஆய்வுக்கூட்டம் ஜமுனா மரத்தூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். சி.என். அண்ணாதுரை எம்.பி. தி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பேசிய தாவது:
ஜவ்வாது மலையில் 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் மாநில இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நெடுஞ்சா லைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
பொதுமக்களுக்கு உணவு, பாதுகாப்பான, குடிநீர், கழிப்பறைகள், போக்குவரத்து, அரங் குகள் அமைத்தல், இளை ஞர்களுக்கு விளையாட்டுப் போட்டி,கலை நிகழ்ச்சிகள் நடத்துவது நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவா மூர்த்தி, துணைத் தலைவர் மகேஸ்வரி செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், ரேணுகோபால், வட்டாட்சியர் மனோகரன், வேளாண்மை இணை இயக்குநர் அரக்குமார், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



