fbpx
Homeபிற செய்திகள்கதிர் கல்லூரியில் சர்வதேச திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

கதிர் கல்லூரியில் சர்வதேச திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரிவு  (TNEDC) மாணவர்களுக்காக “உலகின் தற்போதைய வணிகச் சூழல்” என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்தியது.

இதில் ஆப்பிள் பார்க் நிறுவனம் ஹாங்காங் உற்பத்திப் பிரிவின் தலைவர் சுல்தான் அப்துல் சர்தார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் உயர்-தொழில்நுட்ப உற்பத்தி துறை மற்றும் உலகளாவிய வணிக சூழ்நிலையில் அவரது பரந்த அனுபவம் உள்ளிட்ட தனித்துவமான கண்ணோட்டத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கற்பகம் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் சர்வதேச தொடர்புகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டினார்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் இன்றைய போட்டி உலகில் தேவையான திறன்களுடன் மாணவர்களைச் தயார்ப்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img