Homeபிற செய்திகள்கீதாஜீவன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கீதாஜீவன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்ட மளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பல்கலை கழகத்தின் தரவரிசையில் இடம் பெற்ற இளங்கலை வணிக நிர்வாகயியலில் ரூபி ஏஞ்சல்க்கும், வணிகவியல் விக்னேஷ் வரிக்கும், ஆங்கிலம் தீபக் குக்கும் மற்றும் 2019-2022ல் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையேற்று பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் அவர் பேசுகையில், “கல்வியோடு சேர்த்து பொதுஅறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி நிறைந்த உலகத்தில் நம்முடைய திறமைதான் எதிர்காலத்தை நிர்ண யிக்கும். தமிழக அரசும் கல்விக்கென்று பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

படிக்கின்ற காலம் முதல் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்றார். இதில் கல்லூரி செயலா ளர் ஜீவன் ஜேக்கப், நிர்வாக உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மற்றும் டாக்டர் மகிழ்ஜான், உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி முதல்வர் இளங்குமரன் மற்றும் பேராசிரியர்கள் செய்தி ருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img