பெங்களூருவை தளமாகக் கொண்ட மின்னணு வாகனம் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர், சென்னையில் அண்ணா நகரில் தனது முதல் கடையைத் தொடங்குவதன் மூலம் தமிழகத்தில் தடம் பதித்தது.
இந்த ஸ்டோர் இண்டீ ஸ்கூட்டர்கள், ஆக்செஸ்சரீஸ் மற்றும் அதைச்சார்ந்த வணிகப் பொருட்கள் அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது. பெங்களூருக்கு வெளியே, 1600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள ரிவரின் முதல் நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனை நிலையமாக இது இருக்கும்.
வாக்-இன் மற்றும் டெலிவரி எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரத்யேக அனுபவத்தை வழங்கும் இந்த அண்ணா நகர் ரிவர் ஸ்டோர், ஒரு வரவேற்கும் சூழலைக் கொண்டுள்ளது.
சென்னையின் உள்ளூர் நகர நிலப்பரப்பில் இண்டீயை விளக்கப்படங்களுடன் இரண்டாவது வாழ்விடம் சித்தரிக்கிறது. மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் இக்கதைகள் ரிவர்-ன் நெறிமுறைகளுடன் ஒத்துப்போகின்றன.
அடுத்ததாக கொச்சி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், அகமதாபாத், சூரத், மும்பை, புனே மற்றும் நாக்பூர் வரை ரிவர் தனது தடத்தை விரிவுபடுத்துகிறது.
இண்டீயின் விலை 1,39,335 ரூபாயாக நிர்ணயி்கப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம், சென்னை).