Homeபிற செய்திகள்ஜெம் மருத்துவமனை சார்பில் உடல் பருமன் மாநாடு

ஜெம் மருத்துவமனை சார்பில் உடல் பருமன் மாநாடு

ஜெம் மருத்துவமனை சென்னையில் 7வது ஒபெசிகான் பதிப்பை வெற்றிகரமாக நடத்தியது.

உடல்பருமன் குறித்த இந்த வருடாந்திர மாநாட்டில் இந்தியா முழுவதிலும் இருந்து அறுவைசிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவ உளவியலாளர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் பங்கேற்றனர்

இந்த வருடாந்திர மாநாட்டின்  கருப்பொருள் ‘உடல்பருமன் என்ற மலையை வெல்வது’  என்பதாகும்.

இந்த மாநாட்டில், டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் என்கிற டாக்டர் பால்ஸ், காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் – கலிபோர்னியா டாக்டர் ஜே.வி.பாலசுப்ரமணியன், இதயநோய் நிபுணர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை  தேவிமீனா சுந்தரம், ஸ்ட்ரெந்த் & கண்டிஷனிங் நிபுணர் மற்றும் சர்வதேச கெட்டில்பெல் வீராங்கனை மற்றும் ஜெம் மருத்துவமனை நிபுணர்கள் டாக்டர் பிரவீன்ராஜ், உடல்பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவைசிகிச்சை துறைத் தலைவர், டாக்டர் சரவணகுமார், முன்னணி ஆலோசகர் உடல்பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவைசிகிச்சை டாக்டர் மேக்னஸ் ஜெயராஜ், அறுவைசிகிச்சை ஆலோசகர் – எச்பிபி-கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை துறை போன்ற வல்லுனர்களின் முக்கிய விளக்கங்கள்  இடம்பெற்றன. 

இவை அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அல்லாத அணுகுமுறைகள், குடல் வளர்சிதை மாற்ற நோய்கள் உட்பட உடல்பருமன் தொடர்பான பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது.

படிக்க வேண்டும்

spot_img