இந்தியாவின் மிகப்பெரிய வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், 15 நவம்பர் முதல் 31 டிசம்பர் வரை ‘கோல்டு லோன் மேளா பம்பர் டமாகா ஆஃபர்’ மூலம் தங்கநகைக் கடன்களைப் பெறும் அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் அற்புதமான சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸின் 2400+ தங்கநகைக் கடன் வழங்கும் கிளைகளில் இருந்து தங்கநகைக் கடன் பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஆடம் பரக் கார், பைக்குகள் மற்றும் நிச்சயமான பரிசுகள் முதலிய னவும் இச்சலுகையில் அடங்கும்.
‘கோல்டு லோன் மேளா பம்பர் டமாகா ஆஃபர்’ வெளியீட்டு விழாவில், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், தங்கநகைக் கடன், வணிகப் பிரிவின் தலைவர் சௌரப் குமார் பேசியதாவது: இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான வாடிக் கையாளர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்றுவரும் மிகவும் விருப்பமான தங்கநகைக் கடன் திட்டங்களில் ஐஐஎஃப்எல் தங்கநகைக் கடனும் ஒன்றாகும்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘கோல்டு லோன் மேளா பம்பர் டமாகா ஆஃபர்’- ல் நாங்கள் வழங்கும் கோடிக்கனக்கான மதிப்புள்ள பரிசுகள் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களும் நன்மையடைய விரும்புகிறோம்.
இந்தியா முழுவதும் உள்ள 1200 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள கிளைகளில் தங்கநகைக் கடன் பெற்று, சலுகையை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
கண்கவர் பரிசுகளுடன், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் மாதந்திரம் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் தங்கநகைக் கடனை வழங்குகிறது. உடனடியாக கடனை செயலாக்குதல், தங்கநகைகள் மீது அதிகபட்ச கடன் வழங்கல் மற்றும் கடனை எளிதாக திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் போன்றவற்றை உறுதி செய்கிறது.
ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ்
ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் நிறுவனமானது நிர்வாகத்தின் கீழ் சுமார் ரூ. 55,000 கோடி கடன் சொத்துக்கள் கொண்ட இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் நிதி நிறுவனங்களில் ஒன்றாகும்.
வாடிக்கையாளர்களுடனான #SeedhiBaat மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவது மற்றும் மறைமுகக் கட்டணங்கள் எதுவுமில்லாததால், இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.